எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் ஐந்து நிலைகளில் எழுந்தருளி உள்ளான். அவையாவன, பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்றும் கூறப்படுகிறது. "அதவா, வேத வேத்ய ந்யாயத்தாலே.." என்ற ஆசார்ய ஹ்ருதய சூர்ணை (70) யின்படி எம்பெருமானுடைய பரத்வத்தை ப்ரதிபாதிக்கும் ப்ரமாணம் பாஞ்சராத்ரங்கள்; அந்தர்யாமியைப் ப்ரதிபாதிப்பன ஸ்ம்ருதிகள்; விபவத்தைக் கூறுவன இதிஹாசங்கள், புராணங்கள்; அர்ச்சயைப் ப்ரதிபாதிக்கும் ப்ரமாணம் திவ்யப்பிரபந்தங்கள்.
ஆகப் பன்னிரு ஆழ்வார்களும் அருளிச் செய்த நாலாயிரத் திவ்யப்பிரபந்தப் பாசுரங்களும் எம்பெருமானுடைய அர்ச்சவதாரத்தை ப்ரதிபாதிப்பதிலேயே முக்கிய நோக்கம் உடையன என்றும் ஆழ்வார்கள் அனைவருமே அர்ச்சாவதாரத்திலே மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள் என்றும் இதனால் அறுதியாக தேறுகிறது.
இவ்வாறாக ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திவ்யப்ரபந்தங்களையும், திவ்ய தேசங்களையும் ஓரிடத்தில் குரல் தேடல் வசதியுடன் எடுத்தளிக்க எங்களின் ஒரு சிறுமுயற்சி..
இதனை அனைவரும் பயன்படுத்தி அயர்வறும் அமரர்கள் அதிபதியான எம்பெருமானைக் குறித்த மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களின் ஈரச்சொல்லாம் தமிழ் மொழியில் கண்டும், கேட்டும், அநுஸந்தித்தும் இன்புறுவோம் வாரீர்.
தாஸன் ஸ்ரீவத்ஸன் ரெங்கா